ஆன்லைன் கடிகாரம்

இப்பொழுது நேரம் என்ன?

🌐உலக கடிகாரம்

🇵🇾அசுன்சியோன்

🇨🇺அவானா

🇳🇱ஆம்ஸ்டர்டம்

🇹🇷இசுதான்புல்

🇧🇷இரியோ டி செனீரோ

🇬🇧இலண்டன்

🇮🇹உரோம்

🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿எடின்பரோ

🇫🇮எல்சிங்கி

🇬🇷ஏதென்ஸ்

🇳🇴ஒசுலோ

🇻🇪கரகஸ்

🇵🇰கராச்சி

🇲🇦காசாபிளாங்கா

🇪🇨கித்தோ

🇺🇦கீவ்

🇪🇬கெய்ரோ

🇿🇦கேப் டவுன்

🇩🇰கோபனாவன்

🇲🇾கோலாலம்பூர்

🇭🇷சாகிரேப்

🇨🇳சாங்காய்

🇩🇴சாந்தோ தொமிங்கோ

🇨🇱சான் டியேகோ

🇺🇸சான் பிரான்சிஸ்கோ

🇸🇬சிங்கப்பூர்

🇦🇺சிட்னி

🇰🇷சியோல்

🇧🇬சோஃபியா

🇮🇩ஜகார்த்தா

🇮🇪டப்லின்

🇧🇩டாக்கா

🇦🇱டிரானா

🇮🇱டெல் அவீவ்

🇹🇼தாய்பெய்

🇪🇪தாலின்

🇬🇪திபிலீசி

🇦🇪துபாய்

🇮🇷தெகுரான்

🇨🇦தொராண்டோ

🇯🇵தோக்கியோ

🇺🇸நியூயார்க்கு நகரம்

🇮🇶பகுதாது

🇫🇷பாரிஸ்

🇸🇰பிராத்திஸ்லாவா

🇷🇴புக்கரெஸ்ட்

🇭🇺புடாபெஸ்ட்

🇦🇷புவெனஸ் ஐரிஸ்

🇩🇪பெர்லின்

🇷🇸பெல்கிறேட்

🇹🇭பேங்காக்

🇨🇴பொகோட்டா

🇸🇦மக்கா

🇵🇭மணிலா

🇪🇸மத்ரித்

🇷🇺மாஸ்கோ

🇮🇳மும்பை

🇲🇽மெக்சிக்கோ நகரம்

🇺🇾மொண்டேவீடியோ

🇨🇦மொண்ட்ரியால்

🇱🇻ரீகா

🇧🇴லா பாஸ்

🇺🇸லாஸ் ஏஞ்சலஸ்

🇵🇪லிமா

🇸🇮லியுப்லியானா

🇵🇹லிஸ்பன்

🇵🇱வார்சாவா

🇦🇹வியன்னா

🇱🇹வில்னியஸ்

🇳🇿வெலிங்டன்

🇸🇪ஸ்டாக்ஹோம்

🇻🇳ஹனோய்

கடிகாரம் என்றால் என்ன?

கடிகாரம் என்பது காலத்தை அளவிடும் இயந்திர அல்லது மின்னணு கருவியாகும்.

கடிகாரம் முதன்முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட கடிகாரம் சூரிய கடிகாரம் ஆகும். இது சூரியனின் நிலையை பொறுத்து நேரத்தைக் காட்டும். சூரிய ஒளி மிக்க நாட்களில் ஒரு தட்டையான பகுதியில் இது நிழலை காட்டும். இது மட்டுமன்றி, பல்வேறு நாகரிகங்களில் சூரிய கடிகாரங்களை முன்பே கல் வட்டங்களை பயன்படுத்தி சுழற்சி காலங்களை கணக்கிட்டனர்.

நீர்க்கடிகாரம் என்றால் என்ன?

சூரிய கடிகாரங்களுடன் சேர்த்து மிகப் பழமையான கடிகாரங்களில் நீர்க்கடிகாரங்களும் ஒன்று. இது ஒரு பாத்திரத்தின் உள்ளோ வெளியே வரும் நீரின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் காலத்தை அளவிடுகிறது. நீர்க்கடிகாரங்கள் கிரேக்க நாட்டில் பிளாட்டோ அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் நீரினால் இயங்கும் அலாரம் கண்டுபிடித்தார்.

இயந்திர கடிகாரம் என்றால் என்ன?

"வெர்ஜ் எஸ்கெப்மெண்ட்" என்ற முக்கியமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கும் கடிகாரம் இயந்திர கடிகாரம் எனப்படுகிறது. இத்தொழில்நுட்பம் அனைத்து இயந்திர கடிகாரங்களிலும் பயன்படுகிறது. இது நீர் மற்றும் சூரிய கடிகாரங்களை விட அதிதுல்லியமாக நேரத்தை அளவிட்டன. சுமார் 14ம் நூற்றாண்டு அளவில் இவை ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

பெண்டுல கடிகாரம் என்றால் என்ன?

பெண்டுல கடிகாரம் என்பது பெண்டுலம் என்ற கருவியை கொண்டு நேரத்தை அளவிடுகிறது. 1656ல் டச்சு கடிகார நிபுணரான கிறிஸ்டியான் ஹைஜென்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டபின், 1930கள் வரை ஐரோப்பாவில் இது பரவலாக பயன்படுத்தப்பட்டது.எனவேதான் பலரும் ஹைஜென்ஸை நவீன கடிகாரங்கள் தந்தை எனவும், உலகின் தலைசிறந்த கடிகார தயாரிப்பாளராகவும் போற்றுகின்றனர்.

மின்சார கடிகாரம் என்றால் என்ன?

ஒரு கணத்தை கொண்டு காலத்தை அளவிடுவதற்கு பதிலாக, 1815ல் பிரான்சிஸ் ரோனால்ட்ஸ் என்பவர் மின்சாரம் மூலமாக காலத்தை அளவிடும் கருவியை கண்டுபிடித்தார். 1930களில் சின்க்ரோனஸ் எனப்படும் ஒத்திசையும் கடிகாரங்கள் இயந்திர கடிகாரங்களை பதிலாக பயன்டுத்தப்பட தொடங்கின.

குவார்ட்ஸ் கடிகாரம் என்பது என்ன?

சிலிக்கான் மற்றும் ஆக்சிஜென் அணுக்களால் ஆன குவார்ட்ஸ் என்ற கடினமான படிகக் கல்லினால் இயங்கும் மின்னணு ஆசிலேட்டர் கருவியை கொண்டு இயங்கும் கடிகாரம் தான் குவார்ட்ஸ் கடிகாரம். உலகின் முதல் குவார்ட்ஸ் கடிகாரம் 1927ல் பெல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

அணுக் கடிகாரம் என்பது என்ன?

அணுக்களின் அசைவுகளை பயன்படுத்தி நேரத்தை துல்லியமாக அளவிடும் கருவியே அணுக் கடிகாரம் ஆகும். இன்று நடைமுறையில் அதிதுல்லியமான கடிகாரம் அணுக் கடிகாரமே.

ஆன்லைன் கடிகாரம் என்றால் என்ன?

ஆன்லைன் கடிகாரம் என்பது தங்கள் கம்பியூட்டரின் நேரத்தை 12 மணி அல்லது 24 மணி வடிவில் நேரத்தை நொடி, நிமிடம், மணி மற்றும் தேதியுடன் குறிப்பிடும் டிஜிட்டல் கடிகாரமாகும்.

ஆன்லைன் கடிகாரத்தை பயன்படுத்துவது எப்படி?

ஆன்லைன் டைமர் போல ஆன்லைன் கடிகாரத்தை பயன்படுத்த எந்த தனிப்பட்ட செய்முறையும் தேவையில்லை. உங்கள் கம்ப்யூட்டர் நேரத்தை பொறுத்து சரியான நேரத்தை பெரிய கடிகாரம் போல காட்டும், மேலும் முழுத்திரையிலும் நேரத்தை காட்டும்.

அனலாக் கடிகாரத்துக்கும் டிஜிட்டல் கடிகாரத்துக்கும் வித்தியாசம் என்ன?

அனலாக் கடிகாரமானது ஒரு டயலை சுற்றியுள்ள எண்களை நோக்கி சுட்டிக்காட்டும் முட்களை கொண்டு நேரத்தை காட்டுகிறது. டிஜிட்டல் கடிகாரமோ ஒளியை வெளியிடும் ஒருவகை கண்ணாடியால் ஆன திரையில் நேரத்தை டிஜிட்டல் முறையில் காட்டுகிறது.

கைக்கடிகாரத்துக்கும் கிரோனோகிராப்புக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண கைக்கடிகாரம் வெறும் நேரத்தை மட்டுமே காட்டும். க்ரோனோக்ராப் மூலமாக ஸ்டாப் வாட்ச், டைமர் போன்ற செயல்பாடுகளையும் செய்யலாம்.